ராமதாஸ்: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் செயல்படாத நிறுவனமாக மாற்ற முயற்சி

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் செயல்படாத நிறுவனமாக மாற்றி அதன் அடையாளத்தை அழிக்க மத்திய அரசில் உள்ள அதிகார வர்க்கங்கள் துடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 
இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள முதல்வர் பழனிசாமி இந்தச் சதியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் செம் மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிலையான இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.