நடனபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து  ரூ.60 கோடி மதிப்புள்ள சிலைகள் திருட்டு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந் தோட்டத்தில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான நடன புரீஸ்வரர் கோயிலிலிருந்து நாற் பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிலைகள் தொடர்பில் தமிழக சிலை கடத்தல் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத் தக்கது.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட நடனபுரீஸ்வரர் கோயிலிலிருந்து ஐந்து ஐம்பொன் சிலைகள் 1971, மே 12ஆம் தேதி திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான அந்தச் சிலைகளின் மதிப்பு 60 கோடி ரூபாய் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை தெரிவிக் கிறது. கோயிலின் அப்போதைய அறங் காவலர்களான சுப்ரமணியம், வெங்கட்ராமன் ஆகியோர் சிலைகள் காணாமல்போனதாக 1971ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி நாச்சியார்கோவில் போலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
ஆனால் இவர்களது புகாரில் காவல்துறை அதிக அக்கறை காட்டவில்லை என்று கூறப்படு கிறது. இருப்பினும் கோயிலுக்கு வந்த காவல்துறையினர் கோயில் அர்ச்சகரைக் கைது செய்து ஒரு நாள் விசாரணைக் காவலில் வைத் தனர்.
பின்னர் கிராம மக்கள் கேட்டுக் கொண்டதால் கோயில் அர்ச்சகர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 1972ல் ரூ.50 கோடி மதிப்பிலான நடராஜர், கொலு அம்மன் ஐம்பொன் சிலைகளும் காணாமல் போயின.
இவற்றில் நடராஜர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை