விடிய விடிய அதிமுக, பாஜக கூட்டணிப் பேச்சு

சென்னை: தமிழகத்தில் அதிமு கவும் பாஜகவும் விடிய விடிய கூட்டணிப் பேச்சு நடத்தியுள்ள னர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய பேச்சு வார்த்தை நேற்று நள்ளிரவையும் தாண்டி ஒரு மணி வரை நீடித்தது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக, பாஜக, பாமக,  தேமுதிக, புதிய தமிழகம் அடங்கிய ‘மெகா’ கூட்டணியை உருவாக்க ரகசிய பேச்சு நடந்து வருவதாகத் தகவல் வெளி யானது. 
இது, அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
என்றாலும் அதிமுக தரப்பினர் இதை மறுக்கவோ, ஆமோதிக் கவோ இல்லை.
இந்த நிலையில்தான் தனி விமானத்தில் இரவு 8.00 மணிக்கு தமிழகம் வந்த பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச் சருமான பியூஷ் கோயல், தமிழக மக்களின் சிறந்த எதிர்காலத் திற்காக வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறி யிருந்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்தவே தமிழகம் வந்ததாகவும் அவர் சொன்னார்.
பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் பொள் ளாச்சி மகாலிங்கம் வீட்டிற்கு பியூஷ் கோயல் சென்றார். அங்கு அதிமுக தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ள மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி, முன்னாள் அமைச் சர்கள், கே.பி.முனுசாமி, வைத்தி லிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகி யோர் வந்தனர். அவர்களுடன் கூட்டணி குறித்து பியூஷ் கோயல் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். 
அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டார்.
இதற்கிடையே தனித்து போட்டியிடுவதுதான் ஜெயலலி தாவின் கொள்கை என மக் களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
“தற்போது கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். நானும் விருப்ப மனு அளித்துள்ளேன். 
“கரூர் தொகுதியில் எனக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது, கரூரில் நான் மட்டும்தான் இருக்கிறேனா,” என்று தம்பிதுரை கேள்வியெழுப் பினார்.
கரூர் தொகுதியில் இப்போது எம்பியாக இருப்பவர் தம்பிதுரை. நாடாளுமன்ற துணை சபா நாயகரான இவர், பிரதமர் மோடி அரசையும் பாரதிய ஜனதா வையும்  கடுமையாக விமர்சித்து வருவதால் அதிமுக-பாரதிய ஜனதா கூட்டணி ஏற்பட்டால் தம்பிதுரைக்கு கரூர் தொகுதியில்  மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் தொகுதியில் அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பியும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.