‘நளினி, முருகனைக் காப்பாற்றுங்கள்’

சென்னை: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி நளினியின் தாயார் பத்மாவதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள் ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறையில் அவருடைய மனைவி நளினியும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஒரு வாரத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினியின் தாயார் பத்மாவதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை  வெளியிட்ட கமல். படம்: தமிழக ஊடகம்

21 Mar 2019

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்