‘ரூ.2000 இலவசம் பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார்’

சென்னை: அண்மையில் தமிழக அரசு திடீர் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் வறுமையில் உள்ள அறுபது லட்சம் குடும்பங் களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறும் சமயத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதால் எதிர்க் கட்சிகள் அதிருப்தி அடைந்துள் ளன. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, இது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று கூறி யுள்ளார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை அவர் வெளி யிட்டுள்ளார்.
அடுத்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 1200 கோடி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு நிதியுதவியாக தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது.
ஏறத்தாழ இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சம் அதிமுக குடும் பத்தைச் சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டிருப் பதாக உறுதியான, ஆதாரபூர்வ மான தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து வாக்கு வங்கியை விரிவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடு கிற நோக்கத்தில் அதிமுக வினரையே பகிரங்கமாக பயனாளி களாக சேர்ப்பதற்கு எடுக்கப்படுகிற முயற்சிகளை வன்மையாகக் கண் டிக்கிறேன். இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்படும்.