‘கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பார் விஜயகாந்த்’

சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்று சென்னைக்குத் திரும்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அவருடன் மனைவி பிரேம லதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.
பிரான்ஸ் வழியாக சென் னைக்கு வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதா வும் உடன் இருந்தார். 
விஜயகாந்த் 10 மணி நேரத் துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்தி யாளர்களைச் சந்தித்தார். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயணக் களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை. 
“கூட்டணி குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார். பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை