நாகூர்: நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச் சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது. இதில், பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் நாகூர் ஆண் டவர் தர்காவில், நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு 462ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 6ஆம் தேதி இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. சந்தனக் குடம் வைக்கப்பட்டி ருந்த அலங்கார ரதத்துக்கு முன் னும் பின்னும் சிறியதும், பெரி யதுமான ரதங்கள் சென்றன. ரதத் தின் பின்னால் சென்ற சிறுவர்கள் தாரை தப்பட்டை முழங்க உற் சாகமாக ஆடியபடி சென்றனர். ஊர்வலம் அண்ணா சிலை, ஆஸ்பத்திரி சாலை, புதிய பேருந்து நிலையம், ஏழைப்பிள்ளையார் கோயில், காடம்பாடி, பால்பண் ணைச்சேரி, நாகூரின் முக்கிய தெருக்கள் வழியாக நாகூர் ஆண் டவர் தர்காவைச் சென்றடைந்தது. சந்தனக்கூடு ஊர்வலத்திலும் சந்தனம் பூசும் விழாவிலும் பல் லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜ யகுமார் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறை யினரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர். வரும் 19ஆம் தேதி இரவு குர்ஆன் ஷரீப் ஹதியா செய்து புனிதக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.
கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
2 mins read
நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சந்தனக்குடத்துடன் நாகையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்றனர். படம்: ஊடகம் -

