கூட்டணி குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது - தம்பிதுரை

சென்னை: அதிமுகவில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாரை எடுத்துக்கொண்டாலும் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் பேசி வருபவர் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தான். ஆனால் அவருடைய இந்த கண் டிப்பான பேச்சுதான் கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஒதுக்கப்படும் நிலை அவருக்கு உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி வேண் டாம் என்பதை ஆணித்தரமாகச் சொல்லி வருவதுடன், தனது எதிர்ப்புகளை அவ்வப்போது நாடா ளுமன்ற அவையிலேயே வெளிப் படுத்தினார் தம்பிதுரை. இதனால் வெளிப்படையாகவே பாஜகவை பகைத்துக்கொள்ளவும் ஆரம்பித் தார். 
தம்பிதுரை பேசுவதெல்லாம் அவர் சொந்தக் கருத்து என்று அதிமுக தலைவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அதுவும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டுப் பேச்சு வார்த்தைக்கு ஐவர் குழு அமைத்து முறைப்படி அறிவிக்கப்பட்டதில், தம்பிதுரையின் பெயரும் இடம் பெறாமல் போயிற்று. 
இதனால் பொறுப்புகளிலிருந்து தம்பிதுரை கழற்றிவிடப்பட்டுள் ளார், ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் பேசப்படுகிறது. வரும் தேர்தலில் அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் வாய்ப்புகள் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது. 
முதலாவதாக, பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரேநாளில் அதுவும் விடியவிடிய இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்தது. இதனால் இந்த கூட்டணி ஊர்ஜிதமாகி உள் ளது. 
இரண்டாவது, அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தாலும், இந்த தொகுதி யில் தனக்கு சீட் தருவதில் உத்தரவாதம் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். 
ஏனெனில் விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம்தான் தம்பிதுரை மனு தாக்கல் செய்தார். 
இதே கடைசி நாளில்தான், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத் தம்பியும் கரூர் தொகுதியில் போட் டியிட விருப்ப மனு அளித்துள் ளார். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தம்பிதுரை, “ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டி யிடலாம். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எந்த உத்தர வாதமும் கிடையாது. 
“விஜயபாஸ்கரின் தந்தை கரூ ரில் போட்டியிட வாய்ப்புக் கிடைத் தால் நிச்சயம் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன்,” என்று சொன்னார்.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் கருத்துகள் அதிமுக-வின் கருத் துகள் அல்ல என தருமபுரியில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தி யாளர்களிடம் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த திரு தம்பி துரையிடம் பாஜக கூட்டணி பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி கேட் டனர்.  
அதற்குப் பதிலளித்த தம்பி துரை, “கூட்டணி குறித்து முடி வெடுக்க கட்சி சார்பில் தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
“அந்தக் குழுவில் நான் இடம்பெறவில்லை. எனவே கூட்டணி குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது,” என்றும் தெரிவித்துவிட்டார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை