அமமுகவின் தொப்பி சின்னம் அபமுகவுக்கு ஒதுக்கப்பட்டது

சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமமுகவுக்கு ஒரே சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்த லில் சுயேச்சையாக டிடிவி தின கரன் போட்டியிட களமிறங்கிய போது அவருக்கு ஒதுக்கிய தொப்பி இப்போது அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள் ளது.
இரட்டை இலை, உதய சூரியன், தாமரை, கை, மாம்பழம் போன்ற சின்னங்கள் உங்களுக்கு நன்கு பழகியிருக்கும். முரசு, பம்பரம், இரட்டை மெழுகுவர்த்தி போன்ற சின்னங்கள் கூட இந்த தலைமுறையினருக்கு நன்கு பரிட்சையமாகி விட்டது. ஆனால் இப்போது சில புதிய கட்சிகளும் லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளன.
தேசிய பெண்கள் கட்சி என்ற கட்சியும் வரும் லோக்சபா தேர்த லில் உங்களின் பொன்னான வாக்குகளைக் கேட்டு வரப்போகி றது. இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின் னம், சமையல் எரிவாயு அடுப்பு. இதேபோல பிரஜா சாந்தி என்ற கட்சிக்கு ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. அனைத்திந்திய மக்கள் நல்வாழ்வு கட்சிக்கு ‘பாட்டில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.