பேருந்து எரிந்து சாம்பலானது

தாம்பரம்: சென்னை கோயம்பேட் டில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 35 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. 
பெருங்களத்தூர் அருகே சென்ற போது இரவு மணி 9.45க்கு அந்த பேருந்தில் புகை கிளம்பியது. உடனே பேருந்தை நிறுத்தி உடமைகளுடன் பயணிகள் இறக்கப்பட்டனர்.
பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து கொளுந்து விட்டு எரிந்து சாம்பலானது.