இரா.முத்தரசன்: கிரண்பேடியை திரும்பப்பெறுக

சென்னை: ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாஜகவை சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன். 
இந்த நிலையில் புதுச்சேரியில் அரசின் செயல்பாடுகளை முடக் கிப்போட்டிருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற்று, புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகள் அரசும், ஜனநாயக நடைமுறைகளும் முறையாகச் செயல்பட வழிகாண வேண்டும்,” என இரா. முத்தரசன் வலி யுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக இரா.முத்தர சன் நேற்று வெளியிட்ட அறிக் கையில், “மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருவதும், ஒன்றிய பகுதி களில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளை நிரா கரித்து, மக்கள் விரோதத் தாக்கு தலை நடத்துவதும் தீவிரமாகியுள்ளது. மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு ஆளுநர் களும், துணைநிலை ஆளுநர் களும் ‘முகவர்களாக’ பயன் படுத்தப்படுகின்றனர். 
“பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர்கள் மத்திய அரசின் ‘விசுவாசிகளாகவே’ செயல்படுகின்றனர்.
“முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு  போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக் கிறது. நான்காவது நாளாக தொடரும் போராட்டத்தை துணை நிலை ஆளுநர் அலட்சியப்படுத்தி விட்டு தலைநகர் டெல்லி சென்று விட்டார்,” எனக் கூறினார்.
படை வீரர்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்துவதும், அடக் குமுறை நடவடிக்கைகளில் ஈடு படுவதும் கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். மக் களின்  அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட, போராட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற மக்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்,” என்று இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டார்.