பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக தீவிர முயற்சி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்கான முயற்சிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந் நிலையில் திமுக கூட்டணியில் பாமகவையும் இணைய வைப்பதற் கான முயற்சி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
நாடளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கியக் கூட்ட ணிகள் அமைந்துவிட்டதாகவே கள நிலவரங்கள் கருத வைக் கின்றன. வழக்கம்போல் அதிமுக, திமுக தலைமையில் தனித்தனி அணிகள் அமைகின்றன. தேசிய  கட்சிகளான பாஜக, அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலும் இடம்பெறு வது உறுதியாகிவிட்டது.
தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் தகவல் வெளியாகக் கூடும். 
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தாலும் அடுத்த ஓரிரு தினங்களில் உடன்பாடு ஏற்பட்டு விடும் என்பதே இரு கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்புள்ளதாக முதலில் தகவல் வெளியானது. 
ஆனால், விடுதலைச் சிறுத் தைகள் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. பாமக கூட்டணிக் குள் வரும் பட்சத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும் என அக்கட்சித் தலைவர் திருமாவள வன் திட்டவட்டமாக அறிவித்தார். 
இந்நிலையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டும் வகையில் பாமக நிறுவனத் தலைவர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
இதனால் பாமக இம்முறை அதிமுக அணியில் இணையும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். 
இந்நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் பாமகவை இணைய வைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக புதுத் தகவல் வெளியாகி உள்ளது. 
அதிமுகவுடன் பாமக நடத்திய பேச்சுவார்த்தையில் அக்கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாகவும், இதை அறிந்த திமுக தலைமை 4 தொகுதிக ளுடன் கூடுதலாக புதுவை தொகுதியையும் பாமகவுக்கு அளிக்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
“பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜக-அதிமுக கூட்டணியை விரும்புகிறார். ஆனால், பாமக இளையரணித் தலைவரான அன்புமணியோ திமுக-காங்கி ரஸ் கூட்டணியை விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் சிலர் அன்பு மணிக்கு ஆதரவு தெரிவித்துள் ளனர். இதையறிந்த திமுக தலைமை திருமாவளவனைச் சமாதானப்படுத்தி பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. 
“ராமதாஸ், திருமாவளவன் இருவரையும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வைத்தால் பெரிய அளவில் பலன் கிட்டும் என்பதே திமுக தலைமையின் கணக்கு,” என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.