சிங்கப்பூர் வரும் மாநகராட்சி மாணவர்கள்

சிங்கப்பூர் வரும் மாநகராட்சி மாணவர்கள்

1 mins read

சென்னை: அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா மேற்கொள் ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி மன்றம் ஆகியவை இணைந்து மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் இந்தப் போட்டியை நடத்தி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள 32 மாணவர்கள் மிக விரைவில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.