பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பற்ற நிலை  பதற்றம் அளிக்கிறது: சீமான் கவலை 

தூத்துக்குடி: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் நோக்கம் என்ன, தேவை என்ன? என்பது புரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
இந்தத் தாக்குதல் மன்னிக்க முடியாத பெரும் கொடுஞ்செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்தியாவில் பாதுகாப்புப் படைக்கே போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், இதை நினைக்கும்போது பதற்ற மாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நம் பிரதமரும் இந்திய ஆட்சியாளர்களும் பண மதிப்பிழப்பின் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறினர். இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 
“350 கிலோ வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு அந்த வாகனம் வந்த வழியில் சோதனைச் சாவடி இருந்ததா? நம் நாட்டில் உளவுக் கட்டமைப்பு என்பது இருக்கிறதா, இல்லையா?” என்று தூத்துக்குடியில் பேட்டி யளித்த சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 
மத்திய அரசு மக்களை மட் டுமே அச்சுறுத்தி வைத்திருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் கட்டமைப்பு பலவீனமாக இருக்கிறதோ எனும் சந்தேகம் எழுவதாகக் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்