மதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் பெரியகண்மாயில் நேற்று பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இது 400 ஆண்டுகளாக நடைபெறும் திருவிழா ஆகும். இதில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். இந்தக் கண்மாயில் மீன்பிடித்து, தங்கள் வீட்டில் பூசை செய்து கடவுளுக்குப் படைத்தால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
படம்: தமிழக தகவல் ஊடகம்