மார்ச் 1ல் மோடி; 3ல் பிரியங்கா: அதிமுக, திமுக அனல் பறக்கும் போட்டாபோட்டி 

இந்தியாவில் இன்னும் சில மாதங் களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை யில் புதிய மத்திய ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 
இதை மனதில் வைத்து இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக வும் காங்கிரசும் திராவிட கட்சி களின் துணையுடன் அடுத்த மாதம் அனல் பறக்கும் பிரசாரப் போரைத் தமிழ்நாட்டில் தொடங்கு கின்றன.
பிரதமர் மோடியை கன்னியா குமரிக்கு வரவழைத்து மார்ச் முதல் தேதி பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக ஏற்பாடு செய்து இருக்கிறது.
அந்த மேடையில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரையும் ஒன்று சேர்க்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 
அதேவேளையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் (கிழக்கு உத் தரப்பிரதேசம்) பிரியங்கா காந் தியை வரவழைத்து விருதுநகரில் மார்ச் 3ஆம் தேதி பிரம்மாண்ட பேரணியையும் தென் மண்டல  தேர்தல் மாநாட்டையும் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் திட்ட மிட்டு வருகிறார். 
அந்தக் கூட்ட மேடைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கொணர் வதும் ஸ்டாலினின் இலக்கு.