ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் தடை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் மக்க ளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் நிலத்தடி நீரும் கடுமையாக மோசமடைந்துள்ள தாகவும் கூறி பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தினர். பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட நூறாவது நாள் போராட்டத்தின் போது போலிசார் நடத்திய துப்பாக் கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆயினும், ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் அந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றைப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.
அக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து தீர்ப்பளித்தது.