விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்- உதயநிதி

சென்னை: திமுக குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்யும் விமர்சனங்க ளுக்கு தக்க பதிலடி கொடுக் கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தெரிவித்துள்ளார். செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கமல் அறியாமையில் பேசுவதாகக் குறிப்பிட்டார். 
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகிய இருவரும் இதே போன்று கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இது குறித்து கமல் அண்மையில் காட்டத்துடன் விமர்சித்திருந்தார்.
புதிதாக அரசியலுக்கு வந் துள்ள தன்னை காப்பி அடிப்பதா? என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். 
“சட்டப்பேரவையில் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன். நான் நடத்திய கிராம சபை கூட்டத்தை திமுக காப்பி அடிக்கிறது” என்று கமல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கமலின் குற்றச் சாட்டை மறுத்துள்ளார் உதயநிதி. “கமல் அறியாமையில் பேசுகிறார். கிராமசபைக் கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை,” என்றார் உதயநிதி.
இதற்கிடையே கமலை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட் டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கமல் பல வெட்கங்கெட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும், வெட்கம் என்பதற்கு அவருக்கு அர்த்தம் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Loading...
Load next