மணமேடையில் விவசாயிகளுக்குப் பாத பூசை செய்த மணமக்கள்

காஞ்சிபுரம்: விவசாயிகளை வணங்கி திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பல் வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் தான் தங்களுக்கு முதல் தெய்வம் என மணமகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அத்தி வாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைவராக உள்ள மக்கள் பாதை இயக்கத்தின் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமாவதி என்பவருக்கும் திரு மணம் நிச்சயமானது. இதையடுத்து இவர்களின் திருமணத்தை மக்கள் பாதை இயக்கம் நேற்று முன்தினம் நடத்தி வைத்தது.
அப்போது மணமக்கள் இருவ ரும் 12 விவசாயிகளை மண மேடையில் அமர வைத்து பாதபூசை செய்து வணங்கினர். இதையடுத்து விவசாயிகள், இருவருக்கும் ஆசி கூறி, தாலியை எடுத்து வழங்கி னர். பின்னர் பிரேமாவதியின் கழுத்தில் தாலி கட்டினார் மணிகண்டன்.
“எங்கள் இயக்கத்தின் சார் பில் இந்தத் திருமணம் நடை பெற்றது மகிழ்ச்சி தருகிறது. எங்கள் குலசாமியாக விவசாயி களை முன்னிறுத்தி உள்ளோம். எங்களுக்கு முதல் தெய்வம் விவசாயிகள்தான்,” என்று மக்கள் பாதை இயக்கத்தின் நிர்வாகிகளும் தெரிவித்தனர்.