திமுக சுட்டிக்காட்டும் பிரதமர் தலைமையில் ஆட்சி அமையும் என மு.க.ஸ்டாலின் பேச்சு

கள்ளக்குறிச்சி: மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்தியில் திமுக சுட்டிக்காட்டும் பிரதமர் தலைமை யில் புதிய ஆட்சி அமையும் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, அச்சுறுத்தி தேர்தல் கூட்டணி அமைக்கப்படுவதாகச் சாடிய அவர், பள்ளிப்பருவம் முதலே தாம் கிராமந்தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
“அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் கூட்டணிகளை முறையாக அமைப்பதில் தவ றில்லை. ஆனால் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளை கட்டா யப்படுத்தி, மிரட்டி, அச்சுறுத்தி கூட்டணி உருவாகப்படுகிறது.

“கூட்டணி வைக்க மறுத்தால் குட்கா விவகாரம், கொடநாடு கொலை வழக்கு, வருமான வரிச் சோதனைகள் உள்ளிட்டவைகளில் பிரச்சினையாக்கப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு கூட்டணிக் கான ஏற்பாடுகள் நடைபெறுகின் றன,” என்றார் ஸ்டாலின்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு மார்ச் முதல் வாரம் வெளியாகும் என்று குறிப் பிட்ட அவர், அச்சமயம் நடப்பு அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டப்பேரவை தொகுதிகளுக் கும் தேர்தல் நடைபெறுமா அல்லது ஒட்டுமொத்த சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுமா என்பதை அறிய திமுக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் நான் ஏதோ, புதிதாக கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். முதல்வரும் நானும் தனித்தனியாக கிராமங்க ளுக்குச் செல்கிறோம். 
அப்போது மக்களுக்கு யாரைத் தெரிகிறது என்று பார்த்து விடுவோம். நான் விடுக்கும் சவாலை முதல்வர் ஏற்கத் தயாரா?” என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
 

Loading...
Load next