வழிகாட்டாத ரஜினிகாந்த்: சீமான் 

திருச்சி: தண்ணீர் பிரச்சினையை யார் தீர்த்து வைப்பார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்குச் சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர் களை ஆராய்வதற்கு தலை வன் எதற்கு? எனக் கேள்வி எழுப்பினார்.
“தலைவன்தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அத்த கைய வழி இல்லாதது கேள்வியாக எழுகிறது.
“சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியி டட்டும். அப்போது அவர் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பாரா? என்று பார்ப்போம்,” என்றார் சீமான்.
போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் முன்பு கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளதால், ரஜினிகாந்த் அங்கு செல்லட்டும் என்றார்.
அதிமுக, பாஜக கூட்டணி என்பது அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தது என்றும், அதனால் தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க முடிகிறது என்றும் சீமான் குறிப் பிட்டார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை