பேருந்தைக் கொளுத்திய ஊர்மக்களால் பரபரப்பு

தமிழகத்தில் நடந்த பேருந்து விபத்தில் இளையர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்தைக் கொளுத்தினர்.

சேலம் மாவட்டம் கருமாந்துறை அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இளையர் மாண்டதால் வேதனையில் ஆழ்ந்த ஊர்மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் காட்டும் காணொளி ஒன்று இந்திய சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆயினும் பேருந்து ஓட்டுநருக்கும் அதற்குள் இருந்த பயணிகளுக்கும் என்ன ஆயிற்று என்பது உறுதியாகவில்லை.