தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக பெரும் கூட்டணி; பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7 தொகுதிகள்

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்ப டுகிறது. 
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சென்னையில் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக நேற்று சென்னை வருவதாக இருந்த பாஜக தலைவர்  அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 
இந்நிலையில் அதிமுக, பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பாமக வுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக, பாமக இடையே சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா விடுதியில் கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நேற்று நடை பெற்றது. 
பாமக தலைவர் எஸ்.ராமதாஸ், பாமக இளையர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரு டன் எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்தனர். 
அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், அதிமுக கூட்ட ணியில் பாமகவுக்கு ஏழு தொகுதி கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப் பதாக தெரிவித்தார்.
21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலி லும் அதிமுக போட்டியிடும் என்றும் இந்தத் தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
2019-02-20 06:00:00 +0800

Loading...
Load next