திருமண ஊர்வலத்தில் லாரி  மோதி 13 பேர் பலி, பலர் காயம்

சாலையில் சென்றுகொண்டிருந்த திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மணமகள் உட்பட குறைந்தது 15 பேர் படுகாயமடைந்தனர். 
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர்-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த அந்த விபத்தில் லாரி, கட்டுப்பாட்டை இழந்ததாகவும் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. நால்வர் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இறந்தனர். மருத்துவ மனையில் உள்ளவர்கள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள் ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது. 
உயிர்களைப் பலிகொண்ட இச்சம்பவம் தமக்கு மனவேத னையை அளித்திருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார்.