இணையத் தளங்களை முடக்கிய இந்தியக்குழு

சென்னை: பாகிஸ்தான் இணையத் தளங்களை இந்தியாவைச் சேர்ந்த இணைய ஊருடுவல் நிபுணர்கள் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. 
சுமார் 200 இணையத் தளங்கள் இதுவரை முடக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் அண்மையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தினர். இதில் இந் தியப் பாதுகாப்புப் படைவீரர்கள் பலர் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழ்நி லை நிலவுகிறது. 
தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இணைய ஊடுருவல் குழு ஒன்று பாகிஸ் தானுக்கு நூதன முறையில் எதிர்ப்பு காட்டி வருகிறது. 
அக்குழவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்தின் அதிகாரபூர்வ இணையத் தளங்களை முடக்கியுள்ளனர். மேலும் பல இணையத் தளங்களில் இக்குழுவினர் தொடர்ந்து ஊடு ருவி வருகின்றனர். 
இதுவரை பாகிஸ்தானைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் முடக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 14ஆம் தேதியை தங்களால் மறக்க இயலாது என்றும் தீவிரவாதத் தாக்குதலை மன்னிக்க மாட்டோம் என்றும் முடக்கப்பட்ட இணைய தளங்க ளின் முகப்புப் பக்கத்தில் இந்திய இணைய ஊடுருவல் குழு குறிப்பிட்டுள்ளது. தவிர, தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்ற வாசகமும் சில இணையத் தளங்களில் காணப்படுகிறது.