அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை என சாடுகிறார் அற்புதம்மாள்

புதுக்கோட்டை:   அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் சட்டத்தை மதிப்பதில்லை என பேரறிவாள னின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 
தன் மகன் திரைப்பட நடிகராக இருந்திருந்தால் என்றோ விடு தலை செய்யப்பட்டிருப்பார் என் றும் புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
“சிறைவாசம் அனுபவித்து வரும் என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசு பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரை நேரில் சந் தித்தபோது 7 பேரும் நிச்சயம் விடுதலை செய்யப்படுவர் என்று கூறினார். ஆனால், எதையும் அவர் நிறைவேற்றவில்லை,” என் றார் அற்புதம்மாள். 
7 பேர் விடுதலை விவகாரத்தில் யாருக்கும் எதிராகத் தம்மால் கருத்துத் தெரிவிக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், தன் மகனை விடுதலை செய்யக் கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறுமாறு அனைவரிடமும் கெஞ்ச மட்டுமே முடியும் என்றார்.
“ஏழு பேரின் நிலையை மக்க ளிடம் எடுத்துக் கூறி, மக்கள் சந்திப்பின் மூலம் பலரது ஆதர வைத் திரட்டி, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். அதனால் தான் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகி றேன். பேரறிவாளன் தோற்றத்தில் நடிகர் போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி  இருந் திருந்தால் என்றோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்,” என்றார் அற்புதம்மாள்.