திருச்சியில் களமிறங்க தமிழிசை, வைகோ முடிவு

சென்னை: எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவி தமிழிசையும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் நேருக்கு நேர் மோத இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
இருவரும் திருச்சி நாடாளு மன்றத் தொகுதியில் களமிறங்க இருப்பதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் தனித்தனி அணிகள் உருவாவது உறுதியாகி உள்ளது. அதிமுக அணியில் பாஜக இணையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக அணியில் காங்கிரஸ், மதி முக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற உள்ளன. 
இந்நிலையில் மதிமுகவுக்குத் திருச்சி தொகுதியை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்திருப் பதாகவும், அங்கு வைகோ போட்டி யிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது திமுகவைச் சேர்ந்த குமார் திருச்சி எம்பியாக உள்ளார். அவர் இரு முறை அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மதிமுகவுக்கு அத்தொகுதியை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 
இந்நிலையில் தமிழிசை சௌந் தரராஜனும் அதே தொகுதிக்குக் குறி வைத்திருப்பதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. அவர் முதலில் தென்சென்னை தொகுதியில்தான் களமிறங்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட தகாவும் கூறப்படுகிறது. அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 
இதையடுத்து திருச்சியில் போட்டியிடுமாறு பாஜக கட்சி மேலிடம் தமிழிசைக்கு அறிவுறுத்தி யதாக நம்பப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில் பாஜகவும் மதிமுக வும் இடம்பெற்றிருந்தன. 
இந்நிலையில் அடுத்த நாடாளு மன்றத் தேர்தலில் அவ்விரு கட்சிகளும் எதிரெதிர் அணிகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் மதிமுக கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவியும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்துத் தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு