மதுரையில் அடகுக் கடையிலிருந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளை

மதுரையிலுள்ள அடகுக் கடை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகளைத் திருடிய கும்பலை அந்நாட்டு போலிசார் தேடி வருகின்றனர்.

நரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் பூட்டி இருந்த கடைக்குள் அந்தக் கும்பல் நுழைந்து அங்கிருந்த நகைகளைச் சூறையாடியது. திருட்டுக் கும்பலைச் சேர்ந்தோர் இயந்திரக் கருவியைப் பயன்படுத்தி கடையின் கதவுகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் திறந்தனர். 

கொள்ளைக்காரர்களை போலிசார் மும்முரமாகத் தேடி வருவதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்