ராமதாஸ்: தேக்கு போன்ற நாங்கள் நாணலாகவும் வளைந்துகொடுப்போம்

சென்னை: அதிமுகவுடன் கூட் டணி சேர கைகோர்த்துள்ள பாமக வுக்கு அதிமுக தலைமை எட்டு இடங்களை ஒதுக்கித் தந்துள்ளது. இதில் மிகவும் மனம் நெகிழ்ந்து போயுள்ள பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், தாங்கள் கொள்கையில் தேக்கு மரம் போலவும் கூட்டணி நிலைப்பாட்டில் நாணலாகவும் இருப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், “தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதே 2011ஆம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடு. எனினும் ‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவல நிலைகளுக்கெல்லாம் கார ணம் மாநிலங்களின் உரிமை களுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு மக்கள வையில் போதிய வலிமையில்லாதது தான்’ என்ற கருத்து முன்வைக்கப் பட்டது.
“அதிமுக, திமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி பாமகதான். நாடாளு மன்றத் தேர்தலில் பாமக தலைமை யில் கூட்டணி அமைப்பது சாத்திய மில்லை என்ற நிலையில் அதிமுக,  திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேர்வதுதான் வாய்ப்பாக இருந்தது. 
“மிக நீண்ட ஆலோசனை களுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும் கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப் பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

அதிமுக கூட்டணியில் கையெழுத்தான ஒப்பந்தத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் (நடுவில்). படம்: ஊடகம்