கே.எஸ்.அழகிரி, திருமா: பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கே பயனளிக்கும் 

சென்னை: அதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுக அணிக்கே சாதகமாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட் சித் தலைவர் தொல்.திருமாவளவனும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமூக நீதியை நிலைநாட்டவும் பாமக தொடங்கப் பட்டது. ஆனால், இப்போது தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக பாமக கூட்டணி அமைத்துள்ளது. இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்,” என்றார். 
தொல்.திருமாவளவன் கூறுகையில், “பாஜக, அதிமுக அரசுகள் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தக் கூட்டணியில் தற்போது பாமக இணைந்துள்ளது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுக அணிக்குச் சாதகமாகவே அமையும். முழுக்க முழுக்க கொள்கையில் லாத, சுயநலக் கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுக- பாஜக-பாமக கூட்டணி படுதோல்வி அடையும்,” என்று அவர் கூறினர்.