பாமகவில் பிளவு; இளைஞர் சங்க செயலாளர் விலகல்

சென்னை:  அதிமுக, பாஜக வுடன் இணைந்து பாமக கூட்டணி அமைத்திருப்பதால் அக்கட்சியில் பிளவு வெடித் துள்ளது. 
பாமகவின் கூட்டணி குறித்து, இப்போது பாமகவுக் குள்ளேயே எதிர்ப்புக்குரல் வலுக்க ஆரம்பித்துள்ளது. மாநில பாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக் கையில், “பாமக அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ் வாமல் அதிலிருந்து விலகு கிறேன்,” என்று கூறியுள்ளார். இவரைப் போலவே மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பேசப்படுகிறது.