தினகரன்: கூட்டணி அமையாவிடில்  40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி  

சேலம்: சேலத்துக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்,” என்று கூறினார். 
“கடந்த இரு ஆண்டுகளாக  அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறி ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். 
“இவ்வாறு பேசியவருடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்.
“இந்த பலவீனமான கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றிபெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்,” என்றார் தினகரன்.