மதுரையில் கடையடைப்பு போராட்டம்

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டவேண்டும், 7ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வரலாற்றை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேவரின் தேசபக்தி பேரவையின் சார்பில் மதுரையில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 
கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறு வனங்களும் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள எம்ஜிஆர் காய்கறி, பழக்கடை சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.