அடகுக்கடையில் ரூ.3 கோடி மதிப்புடைய 12 கிலோ நகை கொள்ளை 

மதுரை: நெருக்கடி சூழ்நிலையில் பணமின்றி அவதிப்படுவோர் உடனே நாடிச்செல்வது அடகுக் கடைகளைத்தான். மதுரையில் இருந்த அடகுக்கடை ஒன்றில் வைக்கப்பட்ட 12 கிலோ எடை கொண்ட 1,450 பவுன் தங்க நகைகளைக்  கொள்ளை அடித்துச் சென்றுள்ளது கும்பல் ஒன்று.  அந்த நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி என்றும் தெரியவந்துள்ளது.
 நகை கொள்ளையில் இந்தக் கடையின்  ஊழியர்களுக்கு  தொடர்பிருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் போலிசார் விசார ணையை முடுக்கிவிட்டுள்ளனர். 
மதுரை அழகர்கோயில் ரோட் டைச் சேர்ந்தவர் கோபிநாத், 61. இவர் மதுரை நரிமேடு மருது பாண்டியன் நகரில் அடகுக் கடை நடத்தி வருகிறார். 
நேற்று அடகுக் கடைக்கு விடு முறை என்பதால் கோபிநாத் கோயி லுக்குச் சென்றிருந்தார். 
மாலையில் அவரது மகன் கடையைத் திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவுகளும்  லாக்கர்களும் உடைக்கப்பட்டுச் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த சுமார் 1,450 பவுன் நகைகளும் ரூ.9 லட்சம் ரொக்கமும் கொள் ளையடிக்கப்பட்டிருந்தன. 
இதுகுறித்து கோபிநாத் தல்லா குளம் போலிசில் புகார் செய்தார். மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதம், காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அடகுக் கடையில் கண் காணிப்புக் கேமரா பொருத்தப்பட வில்லை. ஆனாலும் அருகே உள்ள கட்டடத்தில் இருந்த கண் காணிப்பு கேமராவையும் கொள் ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அடகுக் கடை பூட்டுகளையும் லாக்கரையும் கொள்ளையர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் அறுத்துள்ளனர். இதற்காக ஒரு வேனில் கியாஸ் சிலிண்டரையும் எடுத்துச்சென்று கொள்ளைச் சம்பவத்தை நடத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நான்கு தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. முகமூடி கும்பல் திருடர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மதுரையில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் வாகனச் சோதனை நடத்தினர்.
அடகுக்கடை கொள்ளைச் சம்பவத்தில் 17 பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. அதன்பின்னரே கொள்ளையர்கள் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நகைக்கடை ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு வந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை