ஐந்தாவது முறையாக இணையும் திமுக, காங்கிரஸ்

இந்தியப் பொதுத் தேர்தலுக்காகத் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இணைவதாக நேற்று அறிவித்தன. இந்தப் பொதுத் தேர்தலுக்காக இவ்விரு கட்சிகளும் ஐந்தாவது முறையாகக் கூட்டணியில் இணைந்துள்ளன.

தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற இடங்களிலும் புதுச்சேரிக்கான ஓர் இடத்திலும் காங்கிரஸ் போட்டியிடும்.

திமுகவுடன் நட்பார்ந்த முறையில் பழகிய மற்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேர்க்கப்படுவர் என்று திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இணையாததால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை வழங்க முடிந்தததாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.