பாறாங்கல்லுடன் கிணற்றில் குதிக்கும் அற்புத கூட்டணிகள்

சென்னை: எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழக மக்கள் விரும்பாத கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள் ளார். 
நடப்பு அதிமுக ஆட்சி என்று முடிவுக்கு வரும் என தமிழக மக்கள் காத்திருப்பதாகவும், நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். 
தமிழகம் மீண்டும் தலைநிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும் தமிழக மக்கள் அமமுகவை ஆதரிக்க வேண்டும் என தினகரன் கேட்டுக் கொண்டார். 

“தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பெரும் ஊழல் ஆட்சி. இந்த ஆட்சி மீது சிபிஐ விசாரணை தேவை என ஓரிரு மாதங்களுக்கு முன்பாகக் கூட மனு கொடுத்த கட்சிகள் இப்போது இடுப்பில் கயிற்றையும் பாறாங்கல்லையும் கட்டிக்கொண்டு ஒன்றாக கிணற் றில் குதிப்பது போன்ற அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளனர். 

“ஒரு கூட்டணி பண மூட்டை யோடு வரும். மற்றொரு கூட்டணி பலத்தைக் காட்டுகிறேன் என்று வரும். அவர்கள் ஆண்ட கட்சி. மத்தியில் 16 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தார் கள்? என மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்றார் தின கரன். தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்றிவிட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் என்றும் அதிமுக எம்எல்ஏக்களைத் தனது பக்கம் இழுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் தினகரன் விமர்சித்தார். 

நம்பிக்கை துரோகம் செய்தவர் களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சிலர் அமைத்துள்ள கூட்டணிதான் அமமுகவுக்குப் பெரிய பலத்தைக் தந்திருப்பதாகத் தெரிவித்தார். 
தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி குறித்து ஏதும் பேச வில்லை என்றும் வைகோவை மிகவும் மதிப்பதால் அவர் குறித்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றும் தினகரன் கூறினார். இன் னும் ஒரு வாரத்துக்குள் அமமுக வுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குறித்துத் தெளிவாகத் தெரிய வரும் என்றார் அவர். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி