உட்கட்சி தொகுதி உடன்பாடு சுமுகமாக நடக்க வேண்டுமே என தமிழக காங்கிரசார் கவலை

சென்னை: திமுக தலைமையிடம் பேசி எப்படியோ 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது தமிழக காங்கிரஸ். ஆனால், அக்கட்சியில் பல்வேறு கோஷ்டிகள் இயங்குவதால் கட் சிக்குள் தொகுதிப் பங்கீடு சுமூக மாக நடபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. 
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து களம் இறங்குகிறது காங்கிரஸ். அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெற்றது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதுவே அத்தொண்டர்களின் கவலைக் கும் காரணமாக உள்ளது.
ஏனெனில், தமிழக காங்கிரசில் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் தனித்தனி குழுக்களாக இயங்கு கின்றனர். அவற்றுள் திருநாவுக் கரசர், ஈ.வி.கே.எஸ். இளங் கோவன், சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் தலைமையில் தனித்தனி அணி கள் உள்ளன. 
இத்தலைவர்கள் அனைவருமே தமது ஆதரவாளர்களுக்குத் தொகுதியை ஒதுக்கித் தருமாறு டெல்லி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற் போது தொகுதிகளின் எண் ணிக்கை தெரிந்துவிட்டதால், ஆதரவாளர்களை தேர்தலில் களமிறக்குவதற்குத் தொகுதி களைப் பெறுவதற்கான போட்டி கோஷ்டித் தலைவர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. 
இதனால் அடுத்த சில தினங்க ளில் கோஷ்டிப் பூசல் உச்சத்துக்குச் செல்லும் என கருதப்படுகிறது.
மிக விரைவில் முக்கியப் பிரமுகர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டுத் தொகுதிகளைப் பெற முயற்சிப்பர் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு