வீடு தேடி வந்து விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கின்றன மத்திய கட்சிகள்

சென்னை: திமுக தரப்புக்கும் தேமுதிகவுக்கும் இடையே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நாட்டின் நலன் கருதி விஜயகாந்த் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கர சர் வலியுறுத்தி உள்ளார்.
இதன் மூலம் திமுக கூட்ட ணிக்கு வருமாறு அவர் விஜய காந்துக்கு மறைமுக அழைப்பு விடுத்திருப்பதாக  கருதப்படுகிறது.
நேற்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் திருநாவுக்கரசர். அப்போது விஜய காந்திடம் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், பின்னர், தமிழக அரசியல் கள நிலவரங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப் படுகிறது.

இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய திருநாவுக்கரசர், விஜய காந்தை நட்பு ரீதியில் சந்தித்த தாகவும், அமெரிக்காவில் அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்ட றிந்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது அரசியல் ரீதியில் ஏதேனும் பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் குறிப்பிட்டார்.
“விஜயகாந்த் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஓர் அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு அரசியல் தலைவர்க ளும் சந்திக்கும்போது, அரசியல்  பேசாமல் இருக்க முடியுமா? 

“நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்,” என் றார் திருநாவுக்கரசர்.
இந்நிலையில் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிகவும் சேரும் என தாம் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையே இரட்டை இலக் கத்தில் தொகுதிகள் கேட்பதா லேயே கூட்டணி பேச்சுவார்த்தை யில் இழுபறி நீடிப்பதாகக் கூறப் படுகிறது.