பாமகவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப கனிமொழி வலியுறுத்து

சென்னை: முன்பு திராவிடக் கட்சிகள் மீதும் ஜெயலலிதா மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்பது குறித்து
செய்தியாளர்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று திமுக
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். சென்
னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்குள் நிறைய பேரைச் சேர்த்து வெற்றி பெற்று விடலாம் எனும் தவறான சிந்தனையில் அதிமுகவினர் இருப்பதாக குறிப்பிட்டார். “அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை ‘குரங்கு கையில் பூமாலை’ என பாமக முன்பு விமர்சித்திருந்தது. தற்போது யார் பூமாலை? யார் குரங்கு? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.