திடீர் முக்கியத்துவம்; தேமுதிக கூடாரத்திற்கு தலைவர்கள் படையெடுப்பு

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் திடீரென மிக முக்கியமான நபராகக் கருதப் படுகிறார். தமிழகத்தில் சுமார் மூன்று விழுக்காடு வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிகவுக்கு தமிழ கம் முழுவதிலும் பரவலான ஆத ரவு உள்ளது. அதனைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பல்வேறு கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
அதிமுகவுடன் பாமக, பாஜக ஏற்கெனவே கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் திமுகவும் காங்கிரசும் கூட்டணியை அறிவித்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போவ தாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித் துள்ள நிலையில், மக்கள் நீதி மய் யம் கட்சி தனித்தே களம் காணப் போவதாகத் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய விஜயகாந்தை சில தினங்களுக்கு முன்பு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவே அந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

பாஜகவின் பியூஷ் கோயல் விஜயகாந்தைச் சந்தித்து  உடல் நலம் பற்றி விசாரித்துச் சென்றார்.
இது ஒருபுறமிருக்க, எந்தக் கட்சியுடனும் கூட்டணி முடிவாகாத நிலையில், தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த் நேற்று விஜயகாந்தின் வீட்டிற்கே சென்றார். விஜயகாந்தை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டார் என பலரும் கருத்துரைத்தவேளையில், தமது சந்திப்பில் அரசியல் துளி கூட இல்லை என்றும் விஜயகாந் தின் உடல்நலம் பற்றி விசாரிப் பதற்காகவே சந்தித்ததாகவும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய காந்தின் இல்லத்துக்கு முதன் முறையாகச் சென்ற ஸ்டாலின், இதுவும் நலம் விசாரிக்கும் சந் திப்பே என்று கூறிவிட்டார். 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லின்போது தேமுதிகவை திமுக பக்கம் இழுக்க அப்போதைய திமுக தலைவர் அமரர் கருணாநிதி முயற்சி செய்ததாகவும் அதற்கு ஸ்டாலின் தரப்பு ஒத்துழைப்பு நல் காமல் போனதாகவும் கூறப்பட்டது. அந்த மனக்கசப்பைப் போக்கும் விதமாகவே ஸ்டாலின் நேரடியாகச் சென்று விஜயகாந்தின் நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் நேற்று விஜயகாந்தைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. கமல் அண்மைய உரை ஒன்றில் தமிழகத்தில் மூன் றாவது அணி அமையக்கூடும் என குறிப்பிட்டதால் அவரது சந் திப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.