நஜிப்பின் எஸ்ஆர்சி நிதி மோசடி வழக்கு  உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மீதான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 27 மில்லியன் மலேசிய ரிங்கிட் தொடர்பிலான நிதி மோசடி வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 
இந்த வழக்கை விசாரித்துவந்த அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸுரா ஆல்வியின் முன்னிலையில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மனோஜ் குருப் நேற்று இதனைத் தெரிவித்தார். திரு நஜிப் தரப்பின் மூத்த வழக்கறிஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லாவும் அப்போது உடன் இருந்தார்.
இந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் வாதியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி இம்மாதம் 11ஆம் தேதி ஏற்றுக்கொண்டதாக திரு மனோஜ் குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 27 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான நிதி மோசடியில் தொடர்புடையதாக மூன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் திரு நஜிப்பின் மீது இம்மாதம் 8ஆம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அந்த வழக்கின் தொடர்பிலான குற்றப் பத்திரிகையின்படி, திரு நஜிப்பின் ‘ஏஎம்பிரைவேட்’ வங் கிக் கணக்குகளில் மேற்கொள்ளப் பட்ட சட்டவிரோத நடவடிக்கை களின் விளைவாக 27 மில்லியன் மலேசிய ரிங்கிட், 10 மில்லியன் மலேசிய ரிங்கிட், மற்றொரு 10 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகிய தொகைகளை மோசடி செய்ததில் திரு நஜிப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

மேற்கூறப்பட்ட குற்றச் செயல்கள் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி ஜாலான் ராஜா சூலானில் உள்ள ‘ஏஎம்இஸ் லாமிக் பேங்கிங் பெர்ஹாட்’டில் நிகழ்ந்ததாகச் சந் தேகிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிதி மோசடி, பயங்கர வாதத்துக்கு எதிரான நிதியுதவிச் சட்டம் 2001 ஆகியவற்றின்கீழ் இந்தக் குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 மில்லியன் ரிங்கிட்வரை அபராதம், ஐந்தாண்டுகள்வரை சிறைத் தண் டனை ஆகியன விதிக்கப்படலாம்.