அரசாங்கப் பள்ளிகளுக்குச் சீர்வரிசை

புதுக்கோட்டை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல் படும் அரசாங்க பள்ளிக் கூடங்களுக்குத் தேவையான பொருட்களைப் பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பொன்னன்விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத் தேவைப்படும் நாற்காலி, மேசை, அலமாரி விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை அப்பகுதியினர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழிக்காட்டில் உள்ள     அரசு பள்ளிக்கும் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் கெழுகத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிக்கும் மேள தாளங்கள் முழங்க பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்தனர்.