தேர்தல் ஆணைய அதிகாரி விவாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி னார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிய கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட மாநிலக் கட்சிப் பேராளர்களும் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய கட்சிப் பேராளர்களும் கலந்துகொண்டு விவாதித்தனர்.