தமிழிசை: எங்கள் கூட்டணி கண்டு கதிகலங்கும் திமுக

மதுரை: தமிழ்நாட்டில் பாஜக அமைத்துள்ள மங்களகரமான பெரும் கூட்டணியைக் கண்டு திமுக கதிகலங்கிப்போய்விட்டது என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரி வித்துள்ளார். 
அந்தக் கூட்டணிக்கு நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் வரும் என்றும் அதன் பிறகு பாஜக கூட்டணி இப்போது இருப்பதை விட இன்னும் பலம் அடையும் என்றும் காஞ்சிபுரத்தில் செய்தி யாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். 
இத்தகைய பெரும் கூட்டணி, தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் மத்தி யில் மோடி ஆட்சி தொடர இந்தக் கூட்டணி வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். 
‘நாளையும் நமதே நாற்பதும் நமதே’ என்று சொல்லும் அள விற்குக் கூட்டணி பிரம்மாண்ட மாக அமைந்துவிட்டது என்று தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்தார். 
இதனிடையே, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மதுரை வந்தபோது அவரை வர வேற்பதற்காக மதுரை சென்றிருந்த தமிழிசை, தமிழ்நாட்டில் அதிமுக, பாமக, பாஜக ஆகியவை அமைத் துள்ள அணியை மங்களகரமான அணி என்று வர்ணித்தார். 

அன்பால் இணைந்த இந்தக் கூட்டணியில் இலை இருக்கிறது, பூ இருக்கிறது. பழமும் இருக்கிறது என்று தமிழிசை வர்ணித்தார். அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தேர்தல் சின்னத் தையே தமிழிசை இப்படி குறிப்பிட்டு வர்ணித்தார். 
இம்மாதம் 26ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தாமரை தீபம் நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்றும் தமிழிசை கூறினார்.
இதனிடையே, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் திண்டி வனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அதிமுக தலைவர்களுக் காக தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் கள் தெரிவித்தன. 
தேர்தலில் பாமக போட்டியிடப் போகின்ற ஏழு தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அந்த விருந்தின் போது விவாதிக்கப் படும் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவித்து இருந்தன.