தம்பிதுரை: கூட்டணிக்காக சரணாகதி அடையவில்லை

சென்னை: அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக சரணாகதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்க இயலாது என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக கொள்கை ரீதியில் பாஜகவுடன் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார்.
“தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வுடன் கூட்டணி அமைக் கப்பட்டுள்ளது. அதற்காக அதிமுக என்றுமே கொள்கை களை விட்டுக்கொடுக்காது.
“குடும்ப அரசியலில் ஈடுபட்டு கட்சி நடத்துபவர் கள் வெற்றி பெறுவது நாட் டிற்கு நல்லதல்ல. அதனால் அதிமுக உருவாக்கப்பட்டது,” என்றார் தம்பிதுரை. 
தமிழக அரசு வஞ்சிக்கப் பட்டது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரப்போகிறது என்றார்.
அண்மைக் காலமாக இவர் மத்திய பாரதிய ஜனதா அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையுமா? எனும் சந்தேகம் ஏற்பட்டது. எனினும் அதிமுக தலைமை மேற்கொண்ட முயற்சியால் கூட்டணி அமைந்துள்ளது. கட்சி மேலி டம் தம்பிதுரையிடம் பேசி அவரை சாமாதானப்படுத்தி யதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு