தினகரன்: 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடக்கூடும்

சேலம்: தமிழக அரசியல் களத்தில் தினந்தோறும் அதிரடித் திருப்பங் கள் நிகழ்ந்து வரும் நிலையில், தங்கள் மீது நம்பிக்கை இல்லா தவர்கள்தான் கூட்டணிக்காக அலைவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 
தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் தினகரன். 
நேற்று முன்தினம் சேலத்தில் தங்கியிருந்த அவர், செய்தியாளர் களிடம் பேசுகையில், நாடாளு மன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகத் தெரிவித்தார். 
அமமுகவின் வளர்ச்சியைக் கண்டு சில கட்சிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே எல்லோரும் கூட்டணி சேருகின்றனர் என்றும் தினகரன் மேலும் கூறினார். 
“நாங்கள் தனியாகத்தான் நிற்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிமுக அமைச்சர்கள் கூறுவது போல் நாங்கள் தேர்தலைப் புறக்க ணிக்கப் போவதில்லை,” என்றார் தினகரன். 
அனைத்துத் தொகுதிகளுக் கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் 28ஆம் தேதிக்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். 
அமமுகவைப் பொறுத்தவரை இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடப்ப தாகவும் தகவல் இல்லை. 
இதற்கிடையே தினகரனும் விஜயகாந்தும் கைகோர்க்க வாய்ப் புள்ளதாக ஒரு தகவல் வெளி யானது. ஆனால், அது உண்மை யல்ல என்று தினகரன் தெளிவு படுத்தினார். 
“தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைக் கக்கூடாது என எதிர்ப்புத் தெரி வித்தவர் விஜயகாந்த். எனவே அவருடன் கூட்டணி வைக்க முடியாது. ஜெயலலிதா படத்தை வைக்கக் கூடாது, அவருக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கூறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தொண் டர்களும் மக்களும் எப்படி பார்ப்பார்கள்?” என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டவர்களுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்ட அவர், இரட்டை இலை சின்னம் இருந்தும் ஜெயலலிதா தொகுதி யிலேயே வெற்றி பெற முடியாது என்பதைத் தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர் என்றார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த புதிதில், மக்களுடன் மட் டுமே கூட்டணி என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
தற்போது தினகரனும் அதே வழியைப் பின்பற்றுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே நல்லது என அமமுகவின் முக்கிய பிரமுகர்க ளும் நிர்வாகிகளும் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவ தாகக் கூறப்படுகிறது.