அதிமுகவைக் கசக்கிப் பிழிந்து பாஜக கூட்டணி அமைத்தது என்கிறது காங்கிரஸ்

சென்னை: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தமிழகத்தில் உள்ள அதிமுகவைக் கசக்கிப் பிழிந்து கூட்டணியை அமைத்தி ருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரி வித்துள்ளார். 
நேற்று முன்தினம் சென்னை யில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. இதையடுத்து செய்தி யாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மீன்வளத்துறை அமைச் சர் ஜெயக்குமார் குறிப்பிட்டது போல் திமுக கூட்டணியில் சந்தர்ப்பவாதம் ஏதும் இல்லை என்றார். 
அதிமுகவுக்கு எதிராக குட்கா ஊழல் வழக்கை தொடுத்தவர் களுடன் கூட்டணி வைத்தது தான் சந்தர்ப்பவாதம் என்றும் அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
“எங்கள் கூட்டணியில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? நாங்கள் திமுகவுக்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தோமா?
“ஆனால் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்ததுடன் இப்போது கூட்டணி சேர்ந்துள்ள னரே அதற்குப் பேர்தான் சந்தர்ப்ப வாதம்,” என்று சாடினார் கே.எஸ். அழகிரி.
தலைமைச் செயலர் அறையில் அதிரடிச் சோதனை, அமைச்சர் கள் மீது குட்கா வழக்கு என் றெல்லாம் நடவடிக்கை எடுத்த பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்திருப்பது முற்றிலும் சந்தர்ப்பவாதம் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் ஜெயக்குமார் தினமும் நாளேடுகள் எல்லாம் படிப்பதில்லை போலிருக்கிறது என்றார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்