பாமக, மதிமுக, தேமுதிக தேர்தல் சின்னம் கிடைப்பது சந்தேகம் 

தமிழ்நாட்டில் தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில், தன் சின்னத்தைத் தானே தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அந்த மாநிலத்தின் பிரபல கட்சி களான பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய வற்றுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் நடந்த முந்தைய தேர்தல் களில் குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளைப் பெறாமல் போனதால் பாமக, மதிமுக கட்சிகளை அரசியல் கட்சிகள் பட்டியலி லிருந்து தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது.
வைகோ தலைமையிலான மதிமுக கட்சி 2010ல் இந்த அந்தஸ்தை இழந்தது. பாமக 2011 தேர்தலில் போதிய வாக்கு களைப் பெறாமல் போனதால் அதற்கு இந்தக் கதி ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் சாஹூ சில நாட்களுக்கு முன் தலைமைச் செயல கத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் ஏற்பாடுகள் பற்றி விவா தித்தபோது இந்தக் கட்சிகளை அழைக்க வில்லை.

தமிழ்நாட்டில் பாமக 5%க்கும் அதிக மான வாக்கு பலத்தைக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சிக்கு வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக ஆதரவு இருக் கிறது என்று கூறப்படுகிறது.
பாமக இப்போது அதிமுக அணியுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. பாமக வுக்கு அதனுடைய மாம்பழச் சின்னம் கிடைக்காமல் போய்விட்டால் தேர்தலில் பாமகவுக்கு மட்டுமின்றி அதிமுக கூட்ட ணிக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
மதிமுகவைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சிக்குத் தமிழகத்தில் 1%கூட வாக்கு பலம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை.
இதனிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர், வரும் தேர்தலில் பாமகவும் மதிமுகவும் முறையே மாம்பழ சின்னத்தையும் பம்பரச் சின்னத்தையும் திரும்பப் பெறுவதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

அந்த இரண்டு சின்னங்களையும் முறையே தங்களுக்கே ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தைக் கேட்கும் உரிமை இந்த இரண்டு கட்சிகளுக்கும் இல்லாமல் போய்விட்டது என்றார் அவர்.
கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்கப் படுவதற்கு 15 நாள் முன்னதாகவே இந்தக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்து தங்கள் சின்னத்தைத் தங் களுக்கே ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கவேண்டும். இல்லை என்றால் இந்தக் கட்சிகள் தாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளில் தங்கள் சின்னத் தைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சிக்கும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்படும் என்று தெரிகிறது. இந்தக் கட்சி அதிமுகவுடன் சேர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக இந்தக் கட்சிக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்தது.

ஆனால் தொடர்ந்து 2014 நாடாளு மன்றத் தேர்தலிலும் 2-016 சட்டமன்றத் தேர்தலிலும் தேமுதிக முறையே 5.19% மற்றும் 2.39% வாக்குகளையே பெற்றது.
தேமுதிக கட்சியும் அதிமுக கூட்டணி யில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நேற்று பூர்த்தியாக இருந்ததாக ஊடகத் தகவல் கள் தெரிவித்தன. இவ்வேளையில், தமிழ் நாட்டில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக சேர்ந்துள்ள அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று குறிப்பிடப்படும் என அமித் ஷா கூறியதாக பரபரப்பாக தகவல்கள் வெளி யாகி இருந்தன.
ஆனால் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அந்த அணி, 'அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி' என்றே குறிப்பிடப்படும் என்று நேற்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!