பாஜகவில் தொகுதிகளை கைப்பற்ற கடும் போட்டி

சென்னை: தமிழகக் காங்கிரசைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலில் யாரைக் களம் இறக்குவது என்பதில் பாஜகவிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால் அக்கட்சித் தலைமை யாருக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
எதிர்வரும் மே மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் தமிழகத்தைப் பொறுத்த வரை முக்கியக் கூட்டணிகள் உறுதியாகிவிட்டன. 
திமுக தலைமையிலான கூட்ட ணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக பாஜகவுக்கு 5 தொகுதி களை மட்டுமே ஒதுக்கியுள்ளது அதிமுக. இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைத்திருப்பதைக் கட்சித் தலை மையிடம் சுட்டிக் காட்டும் பாஜக மாநில நிர்வாகிகள், காங்கிரசுக்கு இணையாக பாஜகவுக்கும் குறைந்தபட்சம் 10 இடங்களைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

அதிமுக தலைமையிடம் 12 தொகுதிகளை ஒதுக்கக் கோரி பாஜக தரப்பில் கோரிக்கை விடுக் கப்பட்டதாகவும் ஆனால் 5 தொகு திகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் திட்டவட்ட மாகக் கூறப்பட்டதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழக பாஜக நிர் வாகிகள் பலரும் தேர்தலில் கள மிறங்கும் ஆர்வத்திலும் வேகத் திலும் உள்ளனர். வேட்பாளர்களுக் கான உத்தேசப் பட்டியலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன், மாநில பாஜக தலைவி தமிழிசை, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இளைஞரணித் துணைத் தலைவர் முருகானந்தம், மாநிலப் பொருளா ளர் சேகர், தேசியச் செயலர் எச். ராஜா,  உள்ளிட்டோர் கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே தங்க ளுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் பட்டியலில் அண்மையில் வானதி சீனிவாசன், லலிதா குமார மங்கலம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மேலும் சிலர் இணைந் துள்ளதாகத் தெரிகிறது. 
இதற்கிடையே பாஜக கேட் டுள்ள 5 தொகுதிகளைத் தர மறுக்கிறது அதிமுக. குறிப்பாக தென்சென்னை, கோவை, உள் ளிட்ட தொகுதிகளை விட்டுத்தர இயலாது என பாஜக தரப்பிடம் அதிமுக கைவிரித்துள்ளது. 
இதையடுத்து எந்தெந்த தொகுதிகளைப் பெறுவது, அவற்றில் யாரை வேட்பாளராகக் கள மிறக்குவது என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாதான் முடிவெடுப்பார் என்றும் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.