தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசு 6,000 ரூபாய் கொடுப்பது திருட்டுத்தனம்: மு.க. ஸ்டாலின்

கிருஷ்ணகிரி:   திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்க ளுக்கான கல்விக்கடன், விவ சாயக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித் துள்ளார்.
மத்தியில் திமுகவும் இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைந் தால் இந்த வாக்குறுதி உடனே நிறைவேற்றப்படும் என்றும், ஓசூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் குறிப்பிட்டார்.
“உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதா லேயே அதிமுக தலைமை சதித் திட்டம் தீட்டி தேர்தலை நடத்தாமல் உள்ளது. மோடி ஆட்சியை அப் புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. 
“அடுத்து திமுக காட்டும் நபர் தான், நாட்டின் பிரதமராக வரு வார். நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்,” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இடைத்தேர்தலில் தோல்வி கண்டால் முதல்வர் பழனிசாமி தலைமையிலான, பெரும்பான்மை யற்ற அதிமுக அரசு கவிழும் என்று குறிப்பிட்ட அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றார்.
“பிரதமர் மோடி தலைமையி லான ஆட்சியில், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தமிழக முதல்வரும், அதை வலி யுறுத்த வில்லை. 
“பணக்காரர்கள், திரையுலகத் தினரை அழைத்துப் பேசும் மோடி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை, அழைத்துப் பேசவும் இல்லை. 
“நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்தது திருட்டுத் தனம். நம் வீட்டு பணத்தை எடுத்து நமக்கே கொடுக்கின் றனர்,” என்றார் ஸ்டாலின்.
இதையடுத்து அப்பகுதி மக் கள் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும், இளையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அவரிடம் அளித்தனர்.